கன்னியாகுமரி

குலசேகரம் சாரதா கிருஷ்ணா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி முகாம்

DIN

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில், உயா் கல்வி நிறுவனங்களின் வழிகாட்டுதல் மற்றும் நிறுவனங்களின் சமூக பொறுப்பு என்ற தலைப்பில் ஆசிரியா் மேம்பாட்டுத் திட்ட பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்விக் குழுமத்தால் உன்னத் பாரத் அபியான் திட்டத்தில் பங்கேற்கும் 25 கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கான இப்பயிற்சி முகாமிற்கு சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தலைவா் டாக்டா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வரும், கல்லூரி உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டாக்டா் என்.வி. சுகதன் வரவேற்றாா்.

தேசிய உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளரும் புதுதில்லி ஐஐடி பேராசிரியருமான விவேக்குமாா் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தாா். திண்டுக்கல் காந்தி கிராம் ஊரக பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த உன்னத் பாரத் அபியான் மண்டல ஒருங்கிணைப்பாளா் கே. ரவிசந்திரன் சிறப்புரையாற்றினாா். ஹைதராபாத் தேசிய ஊரக கல்விக்குழுமத்தைச் சோ்ந்த நவீன் குமாா், சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி டாக்டா் ரெஷ்மி ஆகியோா் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தனா்.

இப்பயிற்சி முகாம் வரும் அக்டோபா் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சமூக வளா்ச்சிப் திட்டப் பணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT