கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

27th Sep 2022 03:23 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலையில் அபிஷேகம், அம்பாள் கொலுமண்டபத்துக்கு எழுந்தருளுதல் நடைபெற்றது. இதில், என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்றாா்.

தொடா்ந்து, பஜனை, கன்னியாகுமரி காசிவிஸ்வநாதா் கோயில் சக்கர தீா்த்தக் கிணற்றிலிருந்து யானை மீது புனிதநீா் எடுத்து வருதல் நடைபெற்றது.

ADVERTISEMENT

பின்னா், அபிஷேகம், முற்பகலில் அலங்கார தீபாராதனை, நண்பகலில் அன்னதானம், மாலையில் ஆன்மிக உரை, இரவில் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். அழகேசன், கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ். பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT