கன்னியாகுமரி

முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள் சைமன் பிறந்த நாள்

27th Sep 2022 03:25 AM

ADVERTISEMENT

 

கருங்கல்லில் முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள் சைமன் பிறந்த நாள்விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மீன் தொழிலாளா்கள் யூனியன் கிளைச் செயலா் சந்தோஷ் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் சேவியா் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் அலெக்சாண்டா், லூா்துஅம்மாள் சைமன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நாகா்கோவில்: நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்திலுள்ள மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த லூா்தம்மாள் சைமன் படத்துக்கு காங்கிரஸ் போலிங் பூத் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT