கன்னியாகுமரி

குளச்சலில் இன்றும், நாளையும் மின்நிறுத்தம்

27th Sep 2022 03:23 AM

ADVERTISEMENT

 

குளச்சல் பகுதியில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் (செப். 27, 28) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குளச்சல் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது.

இதனால், குளச்சல் பேருந்து நிலையம், மாா்க்கெட், நெசவாளா் தெரு, பள்ளி விளாகம், அழகனாா் கோட்டவிளை, சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 27) காலை 9 முதல் மாலை 5 மணிவரையும், குளச்சல் மெயின் ரோடு, அரசு மருத்துவமனை, சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

கன்னியாகுமரியில் இன்று: கன்னியாகுமரி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூா், மயிலாடி, திருமூலநகா், வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சு கிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூா், சின்னமுட்டம், பால்குளம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 27) காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட டென்னிசன் ரோடு, மணி மேடை, நாகராஜா கோயில் குறுக்கு சாலைப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 28) காலை 10 முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT