கன்னியாகுமரி

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 1.63 லட்சம் பயனாளிகளுக்கு சிகிச்சைஆட்சியா் தகவல்

27th Sep 2022 03:24 AM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் இதுவரை 1.63 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.252 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது: இத்திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.252 கோடி மதிப்பில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 546 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக 5 மருத்துவ காப்பீட்டு பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும், 5 பயனாளிகளுக்கு பரிசுகளையும், காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிவாஆனந்த், ஆண்டோனிஆன்சிராய் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்ளையும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற நாகா்கோவில் எஸ்.எல்.பி மற்றும் டதி பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, மருத்துவப்பணிகள் இணைஇயக்குநா் பிரகலாதன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணைஆட்சியா் திருப்பதி, மாவட்ட திட்ட அலுவலா் நாராயணன், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவா்கள்சிவஷங்கா், ஜோதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT