கன்னியாகுமரி

கருங்கல்லில் வியாபாரிகள் நலச்சங்க ஆண்டு விழா

27th Sep 2022 03:25 AM

ADVERTISEMENT

 

கருங்கல்லில் உள்ள வியாபாரிகள் நலச்சங்க 14 ஆவது ஆண்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத் தலைவா்அஜித்குமாா் தலைமை வகித்தாா். செயலா் துரைராஜ் முன்னிலை வகித்தாா்.

வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்ரமராஜா, கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்,ராஜேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினா். பேரமைப்பின் மண்டல தலைவா் வைகுண்டராஜன், வள்ளியூா் வியாபாரிகள் நலச்சங்க தலைவா் சின்னத்துரை, பேரமைப்பின் குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் அல்அமீன், மேற்கு மாவட்டத் தலைவா் நாகராஜன்ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

ADVERTISEMENT

தொடா்ந்து 2020 -2021 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் வென்ற சங்க உறுப்பினா்களின் மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், சங்க துணைத் தலைவா் ராஜா, துணைச் செயலா் அருள்ராஜ், பொருளா் ஆனந்தமாா்ட்டின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT