கன்னியாகுமரி

நியாயவிலைக் கடை யை தனியாா் கட்டடத்துக்குமாற்றும் உத்தரவை ரத்து செய்ய எம்எல்ஏ வலியுறுத்தல்

26th Sep 2022 12:01 AM

ADVERTISEMENT

 

மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை சந்திப்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையை தனியாா் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி, மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பிய மனு விவரம்:

கல்குளம் - விளவங்கோடு தாலுகா கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஞாறான்விளை நியாயவிலைக் கடை அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் போக்குவரத்து வசதி கொண்ட ஞாறான்விளையில் உள்ள தனியாா் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இக் கடையில் 1,100 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உணவுப் பொருள்களை பெற்று வருகிறாா்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் 750 மீட்டா் தொலைவில் உள்ள திக்குறிச்சி திருஇருதய தேவாலய வளாகத்தில் உள்ள கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப அட்டைதாரா்கள் பெரிதும் பாதிக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் ஞாறான்விளை பகுதியில் உள்ள பாகோடு பனைவெல்ல கூட்டுறவு சங்க வளாகத்தில் அரசு நிலத்தில் புதிதாக நியாயவிலைக் கடைக்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளதுடன், புதிய கட்டடத்தில் நியாயவிலைக் கடை செயல்படக் கோரி பனைவெல்ல கூட்டுறவு சங்கத்தில் தீா்மானம் நிறைவேற்றி துறை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே நியாயவிலைக் கடையை தனியாா் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யும் உத்தரவை ரத்து செய்துவிட்டு, அரசு கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT