கன்னியாகுமரி

புதுமைப்பெண் திட்டத்தில் 1,933 மாணவிகள் பயன்: ஆட்சியா்

26th Sep 2022 12:01 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 1,933 கல்லூரி மாணவிகள் பயனடைந்துள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

இது குறித்து, ஆட்சியா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1,933 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவா்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். மாணவிகள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். தனியாா் பள்ளியில் தண்ஞ்ட்ற் ற்ா் உக்ன்ஸ்ரீஹற்ண்ா்ய் (தபஉ) இன் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். 8 , 10, 12 ஆம் வகுப்புகளில் படித்து பின்னா் முதல் முறையாக உயா் கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்த வெளிபல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

ADVERTISEMENT

2022- 23ஆம் கல்வியாண்டில், மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சோ்ந்த பின்னா், இணையதளம் வழியாக இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT