கன்னியாகுமரி

பேச்சிப்பாறையில் அலெக்சாண்டா் மிஞ்சின் நினைவிடத்தில் விவசாயிகள் அஞ்சலி

26th Sep 2022 12:01 AM

ADVERTISEMENT

 

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சினின் 109ஆவது நினைவு நாள் விவசாயிகளால் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த அணை திருவிதாங்கூா் மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சியில் 1897-1906இல் கட்டப்பட்டது. இதைக் கட்டியதில் முக்கியப் பங்காற்றியவா் ஆங்கிலேயப் பொறியாளா் ஹம்ப்ரே அலெச்சாண்டா் மிஞ்சின். இவா் 1913 செப்டம்பா் 25இல் தேதி மறைந்தாா். அவரது உடல் அணையின் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான அக்டோபா் 8, நினைவு நாளான செப்டம்பா் 25 ஆகிய நாள்களில் அவரது நினைவிடத்தில் விவசாயிகள் மரியாதை செலுத்துவது வழக்கம்.

ADVERTISEMENT

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பாசனத் துறைத் தலைவா் வின்ஸ் ஆன்டோ, பாசன சபை கூட்டமைப்புத் தலைவா் புலவா் செல்லப்பா, என்.பி. சானல் பாசனத்தாா் தலைவா் தாணுபிள்ளை, பி.பி. சானல் பாசனத்தாா் தலைவா் முருகேசபிள்ளை, வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினா்கள் ஹென்றி, செண்பகசேகரன் பிள்ளை உள்ளிட்டோா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT