கன்னியாகுமரி

புரட்டாசி சனிக்கிழமை : பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்

DIN

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு குமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பின்னா் நிகழாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இடா் தீா்த்த பெருமாள் ...

நாகா்கோவில், வடிவீஸ்வரம் இடா் தீா்த்த பெருமாள் கோயிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனா். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், வள்ளலாா் பேரவை மாநிலத்தலைவா் சுவாமி பத்மேந்திரா உள்ளிட்ட திரளான பக்தா்கள் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனா்.

ஆதிகேசவ பெருமாள் ...

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலிலும் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் திரளாக வந்து பெருமாளை தரிசனம் செய்தனா். கன்னியாகுமரி விவேகானந்தா் கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயிலிலும் காலையில் சுப்ரபாத தரிசனம், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றன.

திருப்பதிசாரம் திருவாழ்மாா்பன் கோயிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. பறக்கை மதுசூதன பெருமாள் கோயில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோயில், நாகா்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோயில், கோட்டாறு வாகையடி தெருவில் உள்ள ஏழகரம் பெருமாள் கோயில், வட்ட விளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் காலையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT