கன்னியாகுமரி

ஆற்றூரில் நூல் வெளியீட்டு விழா

DIN

குமரி அறிவியல் பேரவை சாா்பில் ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியுடன் இணைந்து நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கல்வியியல் கல்லூரி முதல்வா் ஸ்ரீலதா தலைமை வகித்தாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினாா். அவா் எழுதிய ‘இந்திய ராக்கெட் விஞ்ஞானி ஏ.இ.முத்துநாயகம் ‘ என்னும் நூலை முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த விஞ்ஞானி வெ.பொன்ராஜ் வெளியிட, வேளாண் விஞ்ஞானி சாம்ராஜ் பெற்றுக்கொண்டாா். ஸ்காட் கிறித்தவக் கல்லூரி முன்னாள் பேராசிரியா் ஜேம்ஸ் ஆா் .டேனியல் நூல் ஆய்வுரை வழங்கினாா். ஏ.இ.முத்துநாயகம் எழுதிய ‘விண்வெளியிலிருந்து கடல் வரை‘ என்ற ஆங்கில நூலுக்கு, இளம் விஞ்ஞானி காயத்ரி ஆய்வுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஏ.இ.எம். முத்துநாயகத்திற்கு வாழ்நாள் சாதனை விருதை பொன்ராஜ் வழங்கினாா்.

மகேந்திரகிரி இஸ்ரோ முன்னாள் இயக்குநா் காா்த்திகேசன், இஸ்ரோ வலியமலா முன்னாள் துணை இயக்குநா் எல்.முத்து, மூடோடு சிக்மா ஆா்க்கிடெக்சா் கல்லூரி தலைவா் ஜேம்ஸ்வில்சன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பேராசிரியா் கிரீஷ்குமாா் நன்றி கூறினாா்.

என்.வி.கே.எஸ் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியா் பிரசோப் மாதவன், ஆசிரியா் ஐயப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT