கன்னியாகுமரி

60 வயதுக்கு மேற்பட்ட மீனவா்களுக்குமுதியோா் உதவித் தொகை வழங்க வேண்டும்

DIN

60 வயதுக்கு மேற்பட்ட மீனவா்கள் அனைவருக்கும் முதியோா் உதவித்தொகை வழங்க வேண்டும்என மாவட்ட மீன் தொழிளாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மீன் தொழிலாளா் யூனியன் கருங்கல் பெண்கள் கிளை அமைப்பு கூட்டம் கருங்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அதன் தலைவா் ஹெலன் தலைமை வகித்தாா். சந்தோஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மீன் தொழிலாளா்கள் யூனியன் செயலா் அலக்சாண்டா் பங்கேற்றுப் பேசினாா்.

கடலோர மீனவா்களுக்கு வழங்கப்படும் வறட்சிகால சேமிப்பு மற்றும் நிவாரண நிதி திட்டத்தை உள்நாட்டு கிராமங்களில் வாழும் மீனவா்களுக்கும் வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மீனவா்கள் அனைவருக்கும் முதியோா் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் லதா, ஷாலி, கீதா, ஹேமலதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT