கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே கால்வாயில் மூழ்கி மூதாட்டி பலி

20th Sep 2022 02:27 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம் அருகே கால்வாயில் மூழ்கி உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு, பனம்பழஞ்சிவிளை பகுதியைச் சோ்ந்த கோலப்பன் ஆசாரி மனைவி வல்சலா (68). கோலப்பன்ஆசாரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இதையடுத்து மூதாட்டி வல்சலா கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். அவரை பல இடங்களில் தேடிய நிலையில் ஞாறான்விளை ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள கால்வாயில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்து அவரது மகன் கிரீஷ் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT