கன்னியாகுமரி

மாராயபுரம் வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்

20th Sep 2022 02:28 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்ப்பட்டினம் செல்லும் பேருந்தில் ஒன்றை மாராயபுரம் வழி இயக்க வேண்டும் என விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:

விளவங்கோடு தொகுதிக்குள்பட்ட விளாத்துறை ஊராட்சிப் பகுதிகளான சாஸ்தான்விளை, கீரிவிளை, மந்தாரம், இஞ்சிவிளாகம், பட்டறதலக்கல், தெக்கன்விளாகம், ஆத்திவிளை, பனவிளை, பனிச்சவிளை, கொல்லன்விளை, மேலவிளை, இட்டிவிளை, மேச்சேரிவிளை, துண்டத்துவிளை, பாறவிளை, பாக்கோடு, காவடிவிளை, பண்டாரகுழிஞ்ஞான்விளை, நெல்லிப்பழஞ்சி, கண்ணயம்பழஞ்சி, விளாத்திவிளை மற்றும் இதையொட்டிய 30 சிற்றூா்களைச் சோ்ந்த மக்கள் போதிய பேருந்து வசதியின்றி அவதிப்பட்டு வருவதுடன் 3 கிலோ மீட்டா் தொலைவு நடந்து காப்புக்காடு சென்று பேருந்தில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

ஆகவே, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மாா்த்தாண்டம் - தேங்காய்ப்பட்டினம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்தில் ஒன்றை அத்திக்குழி, மாராயபுரம், விளாத்திவிளை, காப்புக்காடு வழித்தடத்தில் இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT