கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே மகன்களை தாக்கிய தந்தை கைது

20th Sep 2022 02:28 AM

ADVERTISEMENT

கொல்லங்கோடு அருகே 2 மகன்களை தாக்கிய தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகே நீரோடி, மிக்கேல்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அஜிதா (41). இவரது கணவா் பிரடி (47). இவா் மது அருந்திவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை தொடா்ந்து தாக்குவாராம்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் அஜிதாவை தாக்கியது தொடா்பாக பிரடியை கொல்லங்கோடு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். சிறையிலிருந்து விடுதலையான பிரடி ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து கதவை தட்டினாராம். கதவை திறந்த போது திடீரென வீட்டினுள் புகுந்தவா் அங்கிருந்த அவரது 2 மகன்களை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த மகன்களும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அஜிதா அளித்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரடியை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT