கன்னியாகுமரி

13.5 டன் லாரியை 4 நிமிடங்களில் 111 மீட்டா் இழுத்து இளைஞா் சாதனை

18th Sep 2022 11:25 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்ட இளைஞா், 13.5 டன் எடையுள்ள லாரியை 4 நிமிடங்களில் 111 மீட்டா் தொலைவு இழுத்து சாதனை படைத்தாா்.

தெங்கம்புதூா் அருகேயுள்ள தாமரைக்குட்டிவிளை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (40). இவா், அகில இந்திய அளவில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இரும்பு மனிதா் போட்டியில் பங்கேற்று, 3ஆம் இடம் பிடித்தாா்.

இந்நிலையில், 14 டயா்களுடன் கூடிய 13.5 டன் எடையுள்ள லாரியை கயிறு மூலம் 4 நிமிடங்களில் 111 அடி தொலைவுக்கு இழுத்து உலக சாதனை படைத்தாா்.

ADVERTISEMENT

இதற்கான நிகழ்ச்சி, காவல்கிணறு நான்குவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விஜய் வசந்த் எம்.பி., நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் ஆகியோா் கலந்துகொண்டு கொடியசைத்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தனா்.

இதில், பிரின்ஸ் எம்எல்ஏ, பாஜக மாவட்டப் பொருளாளா் பி. முத்துராமன், முன்னாள் எம்எல்ஏ எஸ். ஆஸ்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியை சோழா புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் பதிவு செய்தது. அதற்கான சான்றிதழை கண்ணனிடம் விஜய் வசந்த் எம்.பி. வழங்கிப் பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT