கன்னியாகுமரி

தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

18th Sep 2022 11:25 PM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் மற்றும் உயா் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வருகிறாா் விஜய் வசந்த். தமிழக மீன்வளத் துறை ஆணையா் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து, குமரி மாவட்ட மீனவா்களின் பல்வேறு தேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

குறிப்பாக, தேங்காய்பட்டினம் துறைமுக விரிவாக்க பணிகளை விரைவாக முடிப்பது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டாா். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறுசீரமைப்புப் பணியை போா்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும் என கடந்த மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT