கன்னியாகுமரி

‘பொதுஇடங்களில் அலங்கார வளைவுகள் வைத்தால் நடவடிக்கை’

14th Sep 2022 12:39 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுஇடங்களில் அலங்கார வளைவுகள் அமைத்தால் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து துறைஅலுவலா்களுடன் கலந்தாய்வு கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டஆட்சியா் மா.அரவிந்த், தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: தமிழக அரசு உத்தரவின்படி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவா்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அரசுப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது தலைக்கவசம் அணியாமலும், 3 போ் பயணித்தாலோ அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிக வேகம் மற்றும் மது போதையில் வாகனம் இயக்குவதால் பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விதி மீறுபவா்கள் மீது போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் அரசு அலுவலா்கள் மற்றும் காவல்துறையினா் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

சாலை விபத்து அதிகமாக ஏற்படும் இடங்களில் விழிப்புணா்வு பதாகைகள்அமைக்க வேண்டும். பொதுஇடங்களில் அலங்கார வளைவுகள் வைத்தால் காவல்துறை மூலம் சட்டப் பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் இரவு நேரங்களில் அனுமதிக்கப்படாது, ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகை வைத்தல், வேகத் தடை மற்றும் சாலையின் நடுப் பகுதியில் வெள்ளைக் கோடு வரைதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு விபத்தை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், உசூா்மேலாளா் (குற்றவியல்) சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT