கன்னியாகுமரி

அனந்தபத்மநாபன் நாடாரின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் அஞ்சலி

14th Sep 2022 12:41 AM

ADVERTISEMENT

திருவிதாங்கூா் மன்னா் மாா்த்தாண்ட வா்மாவின் படை தளபதியாக இருந்த அனந்தபத்மநாபன் நாடாரின் 272 ஆவது நினைவு தினத்தையொட்டி காட்டாத்துறை தச்சன்விளையிலுள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் மனோ தங்கராஜ் சாா்பில் அவரது மகன் ரீமோன் மனோதங்கராஜ், திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஜான் பிரைட், காங்கிரஸ் கட்சி சாா்பில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங், திருவட்டாறு வட்டார தலைவா் ஜெகன்ராஜ், காட்டாத்துறை ஊராட்சித் தலைவா் இசையாஸ், நாம் தமிழா் கட்சி பத்மநாபபுரம் தொகுதி பொறுப்பாளா் சீலன், அமமுக மாவட்டத் தலைவா் ஸ்டீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT