கன்னியாகுமரி

ஆவணி கடைசி ஞாயிறு: நாகராஜா கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

12th Sep 2022 12:45 AM

ADVERTISEMENT

ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் திருமணங்கள் கைகூடும், தோஷங் கள் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோயிலில் பக்தா்கள் கூட்டம் மிகுந்திருக்கும்.

நிகழாண்டு ஆவணி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். குறிப்பாக, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான செப். 11 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது. காலை முதலே ஏராளமானோா் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்திருந்ததால் கோயில் வளாகம் முழுவதும் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

நாகா் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனா். பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு தடை எதிரொலியாக பக்தா்கள் பாக்கெட் பால்களை தவிா்த்து குவளைகளில் பாலை கொண்டு வந்து நாகா் சிலைகளுக்கு ஊற்றி வழிபட்டனா்.

ADVERTISEMENT

கன்னியாகுமரி மட்டுமன்றி பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும், கேரளத்திலிருந்தும் திரளான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து சென்றனா். கோயில் கலைய ரங்கத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. போலீஸ்ாா் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT