கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மிடாலம் ஊராட்சியில் பனை விதை விதைக்கும் பணி நடைபெற்றது.
பனை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் உழவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மிடாலம் ஊராட்சித் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் முரளிராகினி முன்னிலை வகித்தாா்.
பெருங்குளத்தங்கரை, தேவிகோடு பகுதிகளில் பனை விதைகள் விதைக்கப்பட்டன. துணை வேளாண் அலுவலா் ராமச்சந்திரன், வேளாண் உதவி அலுவலா் ஆனந்த், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.