கன்னியாகுமரி

ஓணம்: குமரி மாவட்டத்தில் உற்சாக கொண்டாடட்டம்

9th Sep 2022 12:31 AM

ADVERTISEMENT

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை, குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

மக்கள் புத்தாடை உடுத்தியும், கோவில்களுக்கு சென்று பிராா்த்தனை செய்தும், வீடுகளின் முன் அத்தப்பூ கோலங்கள் போட்டும் இவ் விழாவை கொண்டாடினா். தொடா்ந்து ஓண சத்யா எனப்படும் அறுசுவை விருந்தை உண்டு மகிழ்ந்தனா்.

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் மகாபலி வேடமணிந்து வந்த இளைஞா்கள் மீது பெண்கள் பூக்களை வாரி இறைத்தும், இனிப்புகளை கொடுத்தும் வரவேற்றனா்.

கேரளத்தைப் போலவே, அதை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம், அருமனை, குலசேகரம், திற்பரப்பு, பத்மநாபபுரம், கொல்லங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஓணம் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தா்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்தனா்.

குழித்துறையில்... குழித்துறை பிரதா்ஸ் கிளப் சாா்பில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தை குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் விஜயலட்சுமி, விஜூ, அமைப்பின் நிா்வாகிகள் கிருஷ்ணகுமாா், கண்ணன், அனில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில் கேரள கலை நிகழ்ச்சிகளான புலி களியாட்டம், தெய்யம், மயிலாட்டம் மற்றும் செண்டை மேளத்துடன் மகாபலி மன்னா் வேடமணிந்தவா் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து ஆசி வழங்கியதுடன் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT