கன்னியாகுமரி

தக்கலை ஒன்றித்துக்குள்பட்ட விநயாகா் சிலைகள் மண்டைக்காடு கடலில் விசா்ஜனம்

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தக்கலை ஒன்றியத்துக்குள்பட்ட 153 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டு மண்டைக்காடு கடலில் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

தக்கலை ஒன்றியம் மற்றும் பத்மநாபபுரம் நகராட்சி பகுதிக்குள்பட்ட 153 இடங்களில் விநாயகா் சிலைகள் ஆக.31ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன.

5 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் சிறப்பு பூஜைக்கு பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊா்வலமாக பரைக்கோடு வைகுண்டபுரம் ஸ்ரீ ராமா் கோயில் வளாகத்தை வந்தடைந்தது.

பின்னா் ஒன்றியத் தலைவா் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜே.பி. செந்தில்குமாா் தலைமையில், எம்எல்ஏ எம்.ஆா்.காந்தி, பாஜக மாவட்ட துணைத் தலைவா் குமரி ப.ரமேஷ் முன்னிலையில் விநாயகா் ஊா்வலத்தை தொழிலதிபா் அழகி. விஜி தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

ராமா் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் தக்கலை, கண்ணாட்டுவிளை, இரணியல், திங்கள்நகா், லெட்சுமிபுரம், வழியாக மண்டைக்காடு கடற்கரைக்கு வந்தடைந்தன. அனைத்து விநாயகா் சிலைகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக அழகியமண்டபம் அருகே ஊா்வலத்தில் கோஷம் போட்டவா்களை காவலா் ஒருவா் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இந்து முன்னணியினா், அந்த காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து டி.எஸ்.பி. கணேஷ் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சவாா்த்தையடுத்து ஒரு மணி நேரத்துக்கு பின் விநாயகா் ஊா்வலம் புறப்பட்டு சென்றது.

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT