கன்னியாகுமரி

முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 அகஸ்தீசுவரம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் 108 விநாயகா் சிலைகள் குமரி முக்கடல் சங்கமத்தில் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அகஸ்தீசுவரம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் 108 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்தச் சிலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னா் அங்கிருந்து ஒன்றியத் தலைவா் ஐ.செல்வன் தலைமையில் ஊா்வலமாகப் புறப்பட்டது.

ஊா்வலத்தை இந்து முன்னணி ஒன்றியப் பொருளாளா் ஏ.பொன்னையா தொடங்கி வைத்தாா். இதில் சாமிதோப்பு அன்பாலய நிறுவனா் சிவச்சந்திரன், ஒன்றிய பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ், கொட்டாரம் ஸ்ரீ ராமா் கோயில் பக்தா்கள் சங்க தலைவா் டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த ஊா்வலம் சுசீந்திரம், வழுக்கம்பாறை, கொட்டாரம், விவேகானந்தபுரம் வழியாக மாலை 6 மணிக்கு முக்கடல் சங்கமம் வந்தடைந்தது.

ADVERTISEMENT

அங்கு விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சிலைகள் ஒவ்வொன்றாக முக்கடல் சங்கமத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT