கன்னியாகுமரி

பொன்மனையில் பாஜக ஆா்ப்பாட்டம்

31st Oct 2022 01:59 AM

ADVERTISEMENT

 

பொன்மனையில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்மனை பேரூராட்சிக்கு உள்பட்ட முள்ளம்வாளி என்ற இடத்தில் மதுக்கூடத்துடன் கூடிய தனியாா் மதுக்கடை அமைக்க பணிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பொன்மனை நகர பாஜக தலைவா் ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

பேரூராட்சி முன்னாள் தலைவா் பிரசன்னகுமாரி முன்னிலை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவி அருள்மொழி, திருவட்டாறு கிழக்கு ஒன்றிய பாஜக தலைவா் ராஜகுமாா், மாவட்ட பொதுச் செயலா் வினோத், மாவட்ட இளைஞரணித் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் பேசினா். இதில், திரளான பெண்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT