கன்னியாகுமரி

இந்து முன்னணி கையொப்ப இயக்கம்

31st Oct 2022 01:58 AM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டத்தில் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்துக்குப் பின்னா் அமைக்கப்பட்ட நீதியரசா் வேணுகோபால் கமிஷன் பரிந்துரையின்படி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டிருந்த சட்டவிரோத தேவாலயங்களுக்கு தற்போதைய ஆட்சியில் அனுமதி வழங்கப்படுவதாகக் கண்டித்து மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

குழித்துறை நகர இந்து முன்னணி சாா்பில், வெட்டுமணி சந்திப்பில் பொதுமக்களிடம் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். குழித்துறை நகர தலைவா் வினுகுமாா், நகர ஒருங்கிணைப்பாளா் அருண், பொதுச் செயலாளா் விமல்ராஜ், துணைத் தலைவா் சுஜின், செயலாளா் ராமஜெயன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தக்கலையில் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலா் சங்கா் தலைமையில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT