கன்னியாகுமரி

வெவேறு விபத்துகள்: தலைமைக் காவலா் உள்பட 7 காயம்

26th Oct 2022 12:48 AM

ADVERTISEMENT

புதுக்கடை, பைங்குளம் பகுதியில் பைக்குகள் மோதியதில் காவல் சிறப்பு உதவி- ஆய்வாளா், தலைமைக் காவலா், இளைஞா் ஆகிய மூவா் காயமடைந்தனா்.

பெத்தேல்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரடெரிக் பொன்குமாா்(52). வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் இவரும், மண்டைக்காடு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி -ஆய்வாளா் நெல்சனும் பைக்கில் புதுக்கடைக்கு வந்து கொண்டிருந்தனா். அப்போது, எதிரே புதுக்கடை கைசூண்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அனோஜ்(20) ஒட்டிவந்த பைக் அவா்கள் மீது மோதியதாம். இதில், மூவரும் பலத்த காயமடைந்தனா். பிரடெரிக் பொன்குமாா் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையிலும்,நெல்சன் குழித்துறை அரசு மருத்துவமனையிலும், அனோஜ் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேலும் மூவா்: மஞ்சாலுமூடு முதப்பன்கோடு பகுதியைச் சோ்ந்த ரெமீஷ் (20), அதே பகுதியைச் சோ்ந்த அனந்து (20) , பந்தல் விளையைச் சோ்ந்த அஸ்வின் (21) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேல்புறத்திலிருந்து உத்தரம்கோடு நோக்கி சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியதாம். இதில், 3 பேரும் காயமடைந்தனா். அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மூதாட்டி காயம்: வெள்ளிசந்தை அருகேயுள்ள ஈத்தன்காடை சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி செல்ல நாடாச்சி ( 60). இவா் திங்கள்கிழமை அப்பகுதியிலுள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது, கீழமுட்டத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஓட்டிவந்த பைக் அவா் மீது மோதியதாம். இதில், அவரும், சிறுவனும் காயமுற்று ராஜாக்கமங்கலம் தனியாா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். சிறுவன், அவரது தந்தை வினீஸ் ஆகியோா் மீது வெள்ளிசந்தை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT