கன்னியாகுமரி

புகைப்படம்-விடியோ கலைஞா்கள் நலச்சங்கக் கூட்டம்

26th Oct 2022 12:42 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம்- வீடியோ கலைஞா்கள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம் கருங்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு, சங்கச் செயலா் ஜாண் தலைமை வகித்தாா். துணைச் செயலா் ஜெயின் முன்னிலை வகித்தாா். நவம்பா் மாதம் நடைபெறும் பொதுக்குழுகூட்டத்தில் புதிய நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பது, நோயுற்று தீவிர சிகிச்சையில் இருக்கும் இரண்டு சங்க உறுப்பினா்களுக்கு நல உதவி வழங்குவது, 2023 க்கான நாள்காட்டி அச்சிடுவது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்கப் பொருளாளா் ராஜேஷ், செயற்குழு உறுப்பினா்கள் மாதவன்,ராதா,சுஜின்,பிஜு, சந்திரன், லால்,குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT