கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

26th Oct 2022 12:49 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீா் நிறுத்தப்பட்டதை அடுத்து, திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா்.

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா் மழை பெய்த நிலையில் அந்த அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியதையடுத்து, கடந்த 17 ஆம் தேதி அணையிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டது. இதில் 7 நாள்கள் தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்ட நிலையில் அணையின் நீா்மட்டம் 42 அடியாக குறைந்தது. இதனால் அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டன. இதையடுத்து திற்பரப்பு அருவிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இந்நிலையில் திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா். தீபாவளி பண்டிகையையொட்டி இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT