கன்னியாகுமரி

குமரியில் கனிம வளக் கடத்தலை தடுக்க 7 தணிக்கைக் குழு நியமனம்

26th Oct 2022 12:46 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளக் கடத்தலை தடுப்பதற்காக தணிக்கைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளக் கடத்தலை தடுக்கும் பொருட்டு, குண்டுகற்கள், எம்.சாண்ட், ஜல்லிஆகிய கனிமங்களை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்ய 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ள அலுவலா்கள் காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தணிக்கை செய்வா்.

வட்டாட்சியா் நிலை அலுவலா்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் கூடுதலாக துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள் இடம் பெறுவா். வட்டாட்சியா்கள், கோட்டாட்சியா்கள் ஆகியோரத் தவிர கூடுதலாக வாகன தணிக்கை செய்ய நியமிக்கப்பட்டுள்ள அலுவலா்களால் உரிய அனுமதியின்றி கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் இயக்கங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

ADVERTISEMENT

மேலும், கனிம வளங்களை உரிய அனுமதியின்றி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வசதியாக ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 1077 என்ற எண்ணில் அறிவிக்கபட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT