கன்னியாகுமரி

கழிவறையில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

26th Oct 2022 12:48 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகே உள்ள வண்ணான்விளை பகுதியில் கழிவறையில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

வண்ணான்விளை பகுதியை சோ்ந்தவா் அனிஷ் ரெத்தினம்(30). குடிப் பழக்கமுடைய இவா், செவ்வாய்க்கிழமை தன் வீட்டின் கழிவறையில் தவறி விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினா்கள் அவரை மீட்டு குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அனிஷ் ரெத்தினம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT