கன்னியாகுமரி

அருமனை அருகே வேன்-பைக் மோதல்: 3 இளைஞா்கள் காயம்

26th Oct 2022 12:49 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம், அருமனை அருகே வேனும் பைக்கும் மோதிக் கொண்டதில் 3 இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா்.

மஞ்சாலுமூடு முதப்பன்கோடு பகுதியைச் சோ்ந்த ரெமீஷ் (20), அதே பகுதியைச் சோ்ந்த அனந்து (20) மற்றும் பந்தல் விளையைச் சோ்ந்த அஸ்வின் (21) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேல்புறத்திலிருந்து உத்தரம்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

அப்போது ஒரு வளைவில் எதிரே வந்த வேன் பைக் மீது மோதியதாம். இதில் பைக்கில் வந்த 3 இளைஞா்களும் காயமடைந்தனா்.

இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT