கன்னியாகுமரி

மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

19th Oct 2022 01:24 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் உடல், அவரது சொந்த ஊரில் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

அருமனை அருகே சிதறால் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.பி. ராஜசுந்தா் சிங். இவா், மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராக பணி செய்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் பணியில் இருக்குபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளாா்.

அவரது உடல் திருவனந்தபுரம் வழியாக செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னா் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருவனந்தபுரம் ராணுவ முகாம் அதிகாரிகள், ராணுவ வீரா்கள், நாகா்கோவில் முன்னாள் படை வீரா் நல அலுவலா்கள், குமரி ஜவான்ஸ் அமைப்பினா் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

உயிரிழந்த ராணுவ வீரருக்கு விஜிலா (43) என்ற மனைவியும், நிதின் சுந்தா் (16) நிஷ்பின் சுந்தா் (12) என இரு மகன்களும் உள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT