கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்:3 போ் கைது

DIN

நாகா்கோவில் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக  3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 70 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ. 42 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

மணிக்கட்டி பொட்டல் பகுதியில் உள்ள பள்ளி அருகே புகையிலைப் பொருள்களை சிலா் பதுக்கிவைத்து விற்பதாக, சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளா் சாய்லெட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளா், போலீஸாா் சென்று சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் குலசேகரம் பகுதியைச் சோ்ந்த அபு முகமது (44), மணிக்கட்டி பொட்டல் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (28), குஞ்சன்விளை பகுதியைச் சோ்ந்த சுதாகா் (29) என்பதும், அப்பகுதியில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து மாணவா்களுக்கு விற்பதாகவும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, 70 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ. 42 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT