கன்னியாகுமரி

பாலம் கட்ட அனுமதி கோரிமக்கள் காத்திருப்பு போராட்டம்

7th Oct 2022 10:31 PM

ADVERTISEMENT

 நல்லூா் பேரூராட்சி, இலவுவிளை பகுதியிலுள்ள பட்டணங்கால் கால்வாயில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பாலம் கட்ட அனுமதி வழங்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரி, குழித்துறை பொதுப்பணித்துறை அலுவலகம் முன் மக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு நல்லூா் பேரூராட்சி உறுப்பினா் என். விஜில் தலைமை வகித்தாா். அப்பகுதி பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். போராட்டக்காரா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT