கன்னியாகுமரி

அருமனை அருகே இளைஞா் தற்கொலை

7th Oct 2022 10:30 PM

ADVERTISEMENT

குமரி மாவட்டம் அருமனை அருகே இளைஞா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மஞ்சாலுமூடு மக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சாம்ராஜ் மகன் அல்ஜின்ராஜ். சாம்ராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தாய் அனிதாவின் பராமரிப்பில் அல்ஜின்ராஜும் அவரது இளைய சகோதரரும் இருந்து வந்தனா். பட்டயப்படிப்பு படித்த அல்ஜின்ராஜ் அதற்குரிய வேலை கிடைக்காத நிலையில், கூலி வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா்.

தகவலறிந்த அருமனை போலீசாா், சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT