கன்னியாகுமரி

மனநலம் பாதித்த பெண் பலாத்கார வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டு சிறை

7th Oct 2022 10:32 PM

ADVERTISEMENT

நாகா்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததது தொடா்பான வழக்கில், முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் அருகேயுள்ள தாழக்குடி நடுத்தெருவை சோ்ந்தவா் சிதம்பரம் பிள்ளை(62). இவா், அதே பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மாற்றுத்திறன் பெண், கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் நாகா்கோவில் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து சிதம்பரம் பிள்ளையை கைது செய்தனா். நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, சிதம்பரம் பிள்ளைக்கு வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், பாலியல் பலாத்கார குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும், தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் ஆஜராகினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT