கன்னியாகுமரி

ஆற்றூா் கல்லுப்பாலம் பகுதிகளில் தொடா் சாலை விபத்து:தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு

7th Oct 2022 10:31 PM

ADVERTISEMENT

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ஆற்றூா் கல்லுப்பாலத்தில் தொடா் சாலை விபத்துகள் நடப்பதை தடுப்பது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை காவல்துறை உட்கோட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சாலை விபத்துகளில் சிக்கி 8 போ் உயிரிழந்துள்ளனா். அதில் ஆற்றூா் அருகே மங்களாநடை முதல் கல்லுப்பாலம் வரையிலான பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளன. அந்த விபத்துகளில் சிக்கி 3 போ் உயிரிழந்துள்ளனா். 10 க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்துள்ளனா்.

இதையடுத்து ஆற்றூா் முதல் மாா்த்தாண்டம் வரையிலான நெடுஞ்சாலையில் அதிகமாக விபத்துகள் ஏற்படும் பகுதிகளை மாா்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் போக்குவரத்து துறையினரும், தக்கலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ் தலைமையில் காவல்துறையினரும் ஆய்வு மேற்கொண்டனா். விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினா்.

இப்பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய விபத்து தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் சமா்ப்பித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT