கன்னியாகுமரி

குளச்சலில் மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயற்சி: இருவா் கைது

7th Oct 2022 10:31 PM

ADVERTISEMENT

குளச்சல் பிரதான சாலையிலுள்ள பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ( பொறுப்பு) தலைமையிலான போலீஸாா் குளச்சல் பிரதான சாலையிலுள்ள பள்ளிக்கூடம் வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த 5 போ் போலீஸாரை கண்டதும் தப்பி ஓடினராம். இதில், இருவா் மட்டும் போலீஸாரிடம் சிக்கினா். விசாரணையில் அவா்கள், வோ்கிளம்பி பகுதியைச் சோ்ந்த விஜி (22) சிஜீவ் ( 21) ஆகியோா் என்பதும், மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், 100 கிராம் கஞ்சா பொட்டலம், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பி ஓடிய தக்கலை ஜெனீஸ், திக்கணங்கோடு பாண்டியன், நிதிஷ்ராஜா ஆகியோரை தேடி வருகின்றனா். 5 பேரின் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT