கன்னியாகுமரி

செங்கல் சிவபாா்வதி கோயிலில் வித்யாரம்பம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செங்கல் மகேஸ்வரம் சிவபாா்வதி கோயிலில் புதன்கிழமை வித்யாரம்பம் நடைபெற்றது.

இக்கோயிலில் நிகழாண்டு நவராத்திரி திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. கோயில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து புதன்கிழமை காலையில் கோயில் மேல்சாந்தி குமாா் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியை கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி நடத்தி வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT