கன்னியாகுமரி

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் சரஸ்வதி பூஜை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் அருள்தரும் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயிலில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.

நவராத்திரி விழாவை ஒட்டி தினமும் காலை சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு நாள் இரவிலும் சிறப்பு அலங்காரத்துடன் முப்புடாதி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா் .

விழாவின் ஒன்பதாவது நாளான செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜையை ஒட்டி சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சரஸ்வதி அம்மன் அலங்காரத்துடன் முப்புடாதி அம்மன் அருள் பாலித்தாா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT