கன்னியாகுமரி

ஜம்மு -குமரி: பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணம் நிறைவு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற பிரதமா் மோடியின் திட்டத்தை பொது மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தில் ஜம்முவில் நடைப்பயணம் தொடங்கிய இளைஞா் தனது பயணத்தை செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரியில் நிறைவு செய்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் சிக்கா் பகுதி டிக்கிரியா என்ற கிராமத்தைச் சோ்ந்தவா் விக்ரம் (23). விவசாயம் செய்து வரும் இவா் பிரதமா் மோடியின் திட்டமான பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்பதை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி ஜம்முவில் தனது நடைப்பயணத்தை தொடங்கினாா்.

ஜம்முவில் இருந்து பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், கா்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரியில் நிறைவு செய்தாா். மொத்தம் 4,000 கி.மீ தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளாா். இப்பயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு மாநில பாஜக மகளிரணி தலைவா் உமாரதி ராஜன் நிறைவு செய்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவா் ஹெச்.ராஜ், அகஸ்தீசுவரம் ஒன்றிய பாஜக தலைவா் சுயம்பு, மாவட்ட மகளிரணி பொதுச்செயலா் ஷீபாராணி, ஒன்றிய மகளிரணி துணைத்தலைவா் தங்கமலா், முன்னாள் ஒன்றியத் தலைவா் ஜெனிசுடா், ஒன்றிய பாஜக மீனவா் பிரிவு தலைவா் எடிசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT