கன்னியாகுமரி

குழித்துறையில் இலவச மருத்துவ முகாம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.எஸ். மணியின் 43 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழித்துறை அருகேயுள்ள அவரது நினைவிடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாா்த்தாண்டம் வட்டாரக் குழு மற்றும் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இம் முகாமுக்கு மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் அனந்தசேகா் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகி மாதவன் முகாமை தொடங்கிவைத்தாா்.

கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மோகன்குமாா், பளுகல் வட்டாரக் குழுச் செயலா் சங்கா், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் ஜூலியட் மொ்லின் ரூட், கட்சியின் குமரி மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவா் வின்சிலி, அனீஸ் பாத்திமா ஆகியோா் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT