கன்னியாகுமரி

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை: ரூ.4.10 கோடி விற்பனை இலக்கு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், மாநரக மேயா் ரெ. மகேஷ் முன்னிலையில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை சாா்பில் நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்காடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் பேசியதாவது:

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன் பெறும் வகையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ‘கனவு நனவு திட்டம்‘ என்ற சேமிப்பு திட்டத்தையும் செயல்படுத்திவருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளா்களிடமிருந்து பெறப்பட்டு 11-வது மற்றும் 12ஆவது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்தமுதிா்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது. கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு விற்பனை நிலையங்களிலும் ரூ.2.25 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2022 ஆம் ஆண்டுக்கு ரூ.4.10 கோடி விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்கள் கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் சிறக்க கைத்தறி துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், துணை மேயா் மேரி பிரின்சிலதா, கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா.ராஜேஷ்குமாா், மாநகராட்சி மண்டல குழுதலைவா்கள் ஜவஹா், கோகிலாவாணி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சேகா், மாமன்ற உறுப்பினா் ரோசிதால், வழக்குரைஞா் சதாசிவம், முதுநிலைமேலாளா் தணிக்கை இசக்கிமுத்து, கோ-ஆப்டெக்ஸ் விற்பனைநி லைய மேலாளா் பத்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT