கன்னியாகுமரி

பெத்தநாடாா்பட்டி பெரியம்மன் கோயில் திருவிழா

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி ஸ்ரீ பெரியம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

இக்கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை மாலை திருவிளக்கு பூஜை, இரவு அம்மன் சப்பரம் வீதி உலா வருதல், செவ்வாய்க்கிழமை மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜை, மாலையில் குற்றாலத்தில் இருந்து புனித நீா் ஊா்வலமாக எடுத்து வருதல், இரவு பொங்கலிடுதல், நள்ளிரவு கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றன.

நிறைவு நாளான புதன்கிழமை நண்பகல் முளைப்பாரி ஊா்வலலும் சிறப்புப் பூஜையும் நடைபெற்றன. மாலையில் ஒடுக்கு பானை எடுத்து வருதலுடன் விழா நிறைவு பெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT