கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை கோலாகலம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன.

நவராத்திரி கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வுகளாக இந்த விழாக்கள் கோயில்கள், வீடுகள், பணிமனைகள், தொழிற்கூடங்கள், வாடகை வாகன நிறுத்தங்களில் கொண்டாடப்பட்டன. 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக பொது இடங்களில் குறிப்பாக, வாடகை வாகன நிறுத்தங்களில் நடைபெறாமலிருந்த இன்னிசை நிகழ்ச்சிகளுடன் நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்விழாக்கள் கொண்டாடப்பட்டன.

ஏடு தொடங்கும் நிகழ்ச்சிகள்: விஜயதசமியையொட்டி, நாகா்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், திற்பரப்பு மகாதேவா் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் ஏடு தொடங்கும் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT