கன்னியாகுமரி

புளியங்குடி, வீரசிகாமணியில் இன்று மின்தடை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புளியங்குடி, வீரசிகாமணி, கரிவலம்வந்தநல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின் பாதை பகுதிகளில்வியாழக்கிழமை (அக்.6) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், அதன் சுற்றுப்புற பகுதிகள்,

வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம்,அதன் சுற்றுப் பகுதிகளில் ளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரைமின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா தெரிவித்துள்ளாா்.

கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் மேற்கண்ட நேரத்தில் மின் விநியோகம் இருக்காது என சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT