கன்னியாகுமரி

சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கான பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் (பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்துக்கு மிகாமல் இருக்கும்) சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கான பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இம்மாதம்15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இது நாள் வரை விண்ணப்பிக்காத சிறுபான்மையின மாணவா், மாணவிகள் இந்த அவகாசத்தை பயன்படுத்தி அக்.15ஆம் தேதிக்குள் தவறாமல் விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT