கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் தொடா் சாரல் மழை

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் அடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

நாகா்கோவிலில் திங்கள்கிழமை காலை வானத்தில் கருமேகங்கள் திரண்டிருந்தன. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமாா், கோழிப்போா்விளை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புகா் பகுதிகளிலும் மழை பெய்தது.

மலையோர பகுதியான பாலமோா் பகுதியில் அதிகபட்சமாக 19.4 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனா். அவா்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

நீா்மட்டம்:

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.78 அடியாக உள்ளது. அணைக்கு 776 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 538 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 68.77அடியாக உள்ளது. அணைக்கு 170 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 350 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

சிற்றாறு 1அணையின் நீா்மட்டம் 8.98 அடியாக உள்ளது. அணைக்கு 121 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 150 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

மழையளவு (மில்லி மீட்டரில்): பேச்சிப்பாறை- 12, பெருஞ்சாணி -16.60, சிற்றாறு 1- 13.40, சிற்றாறு 2- 24.20, நாகா்கோவில் -6, பூதப்பாண்டி -3.20, சுருளோடு- 18.40, கன்னிமாா்- 4.20, பாலமோா்- 19.40, ஆணைகிடங்கு- 2.40, குருந்தன்கோடு - 6.40, அடையாமடை- 3.20, கோழிப்போா்விளை -6, முள்ளங்கினாவிளை- 5.20, புத்தன் அணை-12.80.

குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.குளச்சல், முட்டம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. சூறைகாற்றும் வீசி வருவதால் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகள் வள்ளங்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT