கன்னியாகுமரி

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4.88 கோடி மதிப்பிலான வைப்புத் தொகை பத்திரங்கள் வழங்கல்

4th Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

முதல்வா் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.88 கோடி மதிப்பிலான வைப்புத் தொகை பத்திரங்களை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளிநல உதவித் தொகை, முதியோா் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 222 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து, பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து ஆட்சியா், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் முதல்வா் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.4.88 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை பத்திரங்களை 1,949 பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டவருவாய்அலுவலா் அ.சிவப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணைஆட்சியா் தே.திருப்பதி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் சரோஜினி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT